ஜெர்மனியில் பிரதமர் லீயுடன் தேசிய தினக் கொண்டாட்டம்

ஜெர்மனியில் 1994ஆம் ஆண்டில் குடியேறி ஓராண்டுக்குப் பிறகு திருமதி ஏமி கியஸ்ஜன் தொடங் கிய ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் அந்நாட்டில் வசிக்கும் சிங் கப்பூரர்கள் ஒன்று சேர்க்கப்பட் டார்கள். திருமதி ஏமி முதலில் ஜெர்மனி யில் குடியேறியபோது அங்கு சுமார் 200 சிங்கப்பூரர்களே வசித்து வந்தனர். “நான் முதலில் இங்கு வந்த போது நான் தனியாக வசிப்பது போன்ற உணர்வில் இருந்தேன். அங்கு ஆசியர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சிங்கப்பூரர்கள் இல்லை,” என்றார் 59 வயது திருமதி ஏமி.

ஃபேஸ்புக் மூலம் ஒன்று ஜெர் மனியின் பல்வேறு இடங்களில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டன. ஜி-20 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற ஜெர்மனி வந்த பிரதமர் லீ சியன் லூங்குடன், மியுனிக் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 300 சிங்கப்பூரர்கள் திரண்டு தேசிய தினத்தை முன் கூட்டியே கொண்டாடினார்கள். அவர்களில் திருமதி ஏமியும் ஒருவர். நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் லீ, “நான் ஒவ்வோர் ஆண்டும் தேசிய தின நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் அவை சிங்கப்பூரிலிருந்து வெகு தொலைவு இருந்ததில்லை.

ஜெர்மனிக்கு வந்துள்ள பிரதமர் லீ சியன் லூங்குடன் சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்கூட்டியே கொண்டாட திரண்ட சிங்கப்பூரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்