சுடச் சுடச் செய்திகள்

பலரை சுட்டுக்கொன்றது சோமாலிய ராணுவம்

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட 18 கிளர்ச்சியாளர்களைச் சுட்டுக்கொன்றதாக சோமாலியா ராணுவம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா நாடான சோமாலியா வறுமை மிகுந்த நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அல்-காய்தா, அல் ஷபாப் ஆகிய பயங்கரவாதத் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகின்றது. அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களையும் அக்குழுவினர் நடத்தி வந்துள்ளனர்.

குறிப்பாக வடக்குப் பகுதியில் செயல்படும் இவர்களை வேட்டையாடும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடத்திய அதிரடித் தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கல்கலா மலைப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் சோமாலியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் கிளர்ச்சியாளர்களின் முகாம்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியா ராணுவத்திற்கு அமெரிக்கா சிறப்புப் பயிற்சிகள் அளித்து வந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon