மோசுல் மீட்பு: மக்கள் கொண்டாட்டம்

பெய்ருட்: ஈராக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த மோசுல் நகரை ஈராக்கியப் படையினர் கடும் சண்டைக்குப் பிறகு கைப்பற்றியுள்ளனர். மோசுல் நகரம் முழுமையாக ஈராக்கிய பாதுகாப்புப் படையி னரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து ஈராக்கிய மக்கள் வெற்றிக் கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கியத் தலைவர்கள், ராணுவத்தினர் மற்றும் போலிஸ் படை உறுப்பினர்களும் மோசுல் நகரில் ஈராக்கிய தேசியக் கொடியை ஏற்றி வெற்றிக்களிப்பில் திளைத் தனர். அவர்களுடன் சேர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினரும் வெற் றியைக் கொண்டாடினர். மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது கூட்டணிப் படை யினரே.

மோசுலில் ஐஎஸ் இலக்குகள் மீது கூட்டணிப் படையினர் தொடர்ந்து மேற் கொண்ட விமானத் தாக்குதல்கள் ஈராக்கியப் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது. அத்துடன் ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கொடுத்த ஆலோசனை மற்றும் பயிற்சியும் மோசுல் நகரை கைப்பற்ற ஈராக்கியப் படையினருக்கு கை கொடுத்தது. ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அலி அபாடி ஞாயிற்றுக் கிழமை மோசுல் நகருக்குச் சென்று வெற்றியைக் கொண் டாடினார். 2014 ஆம் ஆண்டு மோசுல் நகரை ஐஎஸ் போராளிகள் கைப்பற்றியபோது ஈராக்கிய ராணுவத்தினர் வலுவிழந்து இருந்தனர். மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் தீவிரத் தாக்குதல் நடத்தி வந்தனர். மோசுல் நகரின் எஞ்சி யுள்ள பகுதிகளை ஆக்கிரமத் திருந்த ஐஎஸ் போராளிகளை ஆயுதங் களை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.

மோசுல் நகரம் ஈராக் வசம் வந்ததைத் தொடர்ந்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் சிறுவர்கள். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon