சுடச் சுடச் செய்திகள்

வடகொரியாவுக்கு தடை; சீனாவை நெருக்க அமெரிக்கா உறுதி

வா‌ஷிங்டன்: வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகளை நடப்புக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்திக்கொள்ள சீனாவுக்கு நெருக்குதல் கொடுக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அனைத்துலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சென்ற வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள அமெரிக்கா, போரைத் தவிர்க்க விரும்புவதாக அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றம் புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில் சீனாவின் உதவியுடன் வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தை கைவிடச் செய்ய முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon