ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: 11 பேருக்கு போலிஸ் வலைவீச்சு

சென்னை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு ராஜஸ்தான் போலிசார் வலைவீசி உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள சிலர் நாடு முழுவதும் கைதாகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜமீல் முகம்மது என்பவரை ராஜஸ்தான் போலிசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த முகம்மது இக்பால் என்ற இளையர் பிடிபட்டார். அவர் ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டியது அம்பலமானது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஆருண் என்பவரும் போலிசாரிடம் சிக்கினார்.

அவர் அளித்த தகவலின் பேரில் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அகமது என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலிசார் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய மேலும் 11 பேர் தமி ழகத்தில் பதுங்கி இருப்பதாக ராஜஸ் தான் மாநில காவல்துறை தெரிவித் துள்ளது. தமிழக போலிசாருடன் இணைந்து 11 பேரையும் பிடிக்க அம்மாநில காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே தீவிரவாதிகளைக் கண்டறிந்து கைது செய்வதில் தமிழக உளவுத்துறை தோல்வி கண்டுவிட்ட தாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். படம்: ஊடகம்

07 Dec 2019

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் போலிஸ் அதிகாரி விண்ணப்பம்

மக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18  லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். படம்: ஊடகம்

07 Dec 2019

இந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்