மாங்கனித் திருவிழா: பழங்களை வீசிய பக்தர்கள்

காரைக்கால்: வழக்கம் போல் இந்தாண்டும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா சிறப்பாக நடந்தேறியது. இச்சமயம் பக்தர்கள் பழங்களை வீசி இறைவனை வழிபட்டனர். காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறு கிறது. சுமார் ஒருமாத காலம் இந்தத் திருவிழா நடந்தேறும். இந்தாண்டு ஜூலை 6ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழா வில் முக்கிய நிகழ்வான மாங் கனிகளை வீசி இறைவனை வழி படும் படலம் சனிக்கிழமை நடை பெற்றது.

சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன் பவழக்கால் சப்பரத்தில் எழுந்த ருள, ஆயிரக்கண்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைவனுக்கு மாங்கனி படைத்த னர். வீதியுலாவின் போது சாலை கள், வீட்டு மாடிகள், கடைகள் எனப் பல்வேறு இடங்களில் கூடியி ருந்த திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். வீசப்பட்ட மாங்கனிகளைப் பிடிப்பதற்கும் போட்டி இருந் தது. அம்மாங்கனிகளைப் பக்தர்கள் பலரும் பிரசாதமாகக் கருதி கொண்டு சென்றனர்.

வீட்டு மாடியிலிருந்தபடி மாங்கனிகளை வீசும் பெண்கள். படம்: தகவல் ஊடகம்