பஞ்ச பிரதேசங்களாக மாறிய நாடுகள்: சீமான் தகவல்

சென்னை: மீத்தேன் வாயு எடுக் கிறோம் என்று சொல்லித்தான் பல நாடுகள் இன்று பஞ்ச பிரதேசங்களாக மாறியுள்ளன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (படம்) கூறினார். கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பல்வேறு கட்சிகள் ஒருங் கிணைந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்களின் வாழ்விடங்களை எல் லாம் நாசமாக்கிவிட்டு எண் ணெய்க் கிணறுகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறது அரசு எனக் கேள்வி எழுப்பினார்.

“நெடுவாசல், ஜல்லிக்கட்டு எனப் போராடும் மக்களை அடித்து கலைக்கிறது அரசு. இதுதான் போராட்டத்தை முடி விற்கு கொண்டு வர அரசின் வழிமுறையாக உள்ளது. “போராடும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது, தடியடி நடத்தி சித்திரவதை செய்வது, சிறையில் போடுவது ஆகிய வையே ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது,” என்றார் சீமான். மக்களைக் கொன்ற பின் நிர்வாகத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர், வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தும் அரசின் போக்கை கண்டித்தே ஆர்ப் பாட்டம் நடப்பதாகக் கூறினார்.

“கதிராமங்கலத்தில் தேனாக இனித்துக்கொண்டிருந்த இந்த பூமியில் தண்ணீர் ஏன் மஞ்ச ளாகியது? என் நிலத்திலிருந்து எடுக்கும் தண்ணீரை நான் குடிக்க முடியாது, சமைக்க முடி யாது என்றால் என்ன அர்த்தம்? “மீத்தேன் எடுத்த மற்ற நாடுகளில் உள்ள கிணறுகள் இதுவரை எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தீயை அணைக்க முடியவில்லை. அது போன்றுதான் இங்கேயும் நடக்கப்போகிறது,” என்று சீமான் எச்சரித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்தியாவின் அசாம் மாநிலம், கௌஹாத்தி நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிடும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி

14 Dec 2019

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் : மூவர் உயிரிழப்பு