சுடச் சுடச் செய்திகள்

அமைச்சரிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரும் பால் நிறுவனங்கள்

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எழுப்பிய புகார் காரணமாக தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக 3 தனியார் பால் நிறுவ னங்கள் தெரிவித்துள்ளன. பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டின் காரணமாக தங்களது விற்பனை சரிந் துள்ளதாக அந்நிறுவனங்கள் கூறியுள் ளன. இந்நிலையில், அமைச்சர் தங்க ளுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வலியுறுத்தி அம் மூன்று நிறுவனங்களும் வழக்கு தொடுத்துள்ளன.

தனியார் பால் நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அண்மையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பாலில் கலக்கப்படும் சில ரசாயனங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் ஆபத்தும் உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் அவர் எச்சரித் திருந்தார். “இதனால் எங்களது விற்பனை சரிந்துள்ளது. வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. எனவே அமைச்சர் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்,” என 3 தனியார் பால் நிறுவனங்க ளும் வலியுறுத்தி உள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon