இறுதிக் கட்டத்தில் வந்தது ‘ இடி’

ப. பாலசுப்பிரமணியம்

தற்காப்பை முறியடிக்காதபடி 23 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிங்கப்பூர் காற்பந்துக் குழு விளையாடியது. ஆனால் ஆட்டம் முழுக்க அதனால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. ஆசியா காற்பந்துக் கூட்டமைப்பு 23 வயதுக்குக் கீழ்ப்பட்ட காற்பந்துப் போட்டிகளின் தகுதிச் சுற்றுக்குத் தயாராகும் நட்புமுறை ஆட்டத்தில் அது நேற்று முன்தினம் சுவா சூ காங் அரங்கில் 1-0 கோல் கணக்கில் அதே வயதுப் பிரிவு இந்திய அணியிடம் தோற்றது. ஆட்டத்தை மும்முரமாகத் தொடங்கிய சிங்கப்பூர் குழு முன்னணிக்குச் செல்ல இந்திய அணியின் தற்காப்பு இடம் கொடுக்கவில்லை. சிங்கப்பூர் அணியின் முன்னணி ஆட்டக் காரர்கள் ஹனாஃபி அக்பர், இக்ஷான் பாண்டி ஆகியோர் பலமுறை கோல் வாய்ப்புகளை உருவாக்க முயன்றும் முயற்சிகள் வீணாகப்போனது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் இந்தியாவின் சென்னை சிட்டி காற்பந்து மத்திய திடல் ஆட்டக் காரர் நந்தகுமார் பெனால்ட்டி எல் லையிலிருந்து அடித்த பந்து கோல் வலையைத் தாண்டிச் சென்றது,

அதுவே முதல் பாதியின் சிறந்த கோல் வாய்ப்பாக விளங்கியது. இரண்டாம் பாதியில், இந்திய அணி ஆட்டத்தில் ஆதிக்கத்தைக் கூட்டியது. 60வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக வந்த இந்தியாவின் சாங்தீ அடித்த கோல் 'ஆஃப்=சைட்' என நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டம் முழுக்க சிங்கப்பூர் தற்காப்புக்கு தலைவலி தந்த நந்தகுமார் பெனால்ட்டி எல்லைக்கு அனுப்பிய பந்தை சிங்கப்பூரின் இர்ஃபான் சமாளிக்க திண்டாடி யதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் 80வது நிமிடத்தில் புகுத்தி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் மத்தியதிடல் ஆட்டக்காரர் ஜெர்மன்பிரிட் சிங். செய்தியாளர்களிடம் ஆட்டத் திற்குப் பிறகு பேசிய சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளர் ரிச் சர்ட் தார்டி, நன்றாகச் செய்ய வேண்டும் என்று ஆட்டத்தைத் தொடங்கிய சிங்கங்கள் ஆட் டத்தை தோற்றதில் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.

மத்திய திடலிலிருந்து பந்தை எடுத்துக்கொண்டு பல விளையாட்டாளர்களையும் எளிதில் கடந்து சென்று சிங்கப்பூர் தற்காப்புக்கு ஆட்டம் முழுக்க தொந்தரவு தந்த இந்தியக் குழு ஆட்டக்காரர் நந்தகுமார் (இடது). படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!