சுடச் சுடச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

கிங்ஸ்டன்: இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் எவின் லீவிஸின் அதிரடி சதத்தால் 191 ஓட்டங்கள் இலக்கை அடைந்து வெஸ்ட்இண்டீஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. கிங்ஸ்டன் நகரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ஓட்டங்களைக் குவித்தது. 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. டி-20 போட்டிகளில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கிய எவின் லீவிஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆட்டத்தின் போக்கை தொடக்கத்திலேயே மாற்றி விட்டனர். ஆட்டத்தின் 9வது ஓவரில் அதிரடி மன்னன் கெயில் 20 ஓட்டங்களில் வெளியேறினாலும், லீவிஸ் இந்திய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon