தொடரை வென்றது ஸிம்பாப்வே

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3=2 எனக் கைப்பற்றி ஸிம்பாப்வே வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே முடிந்த நான்கு போட்டிகளில் இரு அணி களும் தலா இரண்டு வெற்றி கள் பெற்று தொடரில் 2=2 என சமநிலையில் இருந்தது. தொடரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்தோடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இலங்கை அணி 50 ஓவர் களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. ஸிம்பாப்வே 38.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்து இலங்கை மண்ணில் முதல்முறையாக வென்றது.