ரூனி: மீண்டும் இங்கிலாந்துக்கு விளையாட ஆசை

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டுச் சென்று எவர்ட்டனில் இணைந்துள்ள வெயின் ரூனி இங்கிலாந்துக்காக மீண்டும் விளையாட விரும்புவதாகக் கூறியுள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவரான ரூனி அக்குழுவுக்காக இதுவரை 53 கோல்கள் போட்டுள் ளார். இங்கிலாந்துக்காக ஆக அதிக கோல்களைப் போட்ட வீரர் ரூனிதான். “இங்கிலாந்துக்காக விளையாட எனக்கு மிகவும் பிடிக்கும். நிர்வாகி கேரத் பேல்தான் அக்குழுவுக்கு நான் விளையாடுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்,” என்றார் ரூனி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மான்செஸ்டர் சிட்டியின் ஆறாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (இடது). ஏற்கெனவே ஐந்து கோல்களை விட்டு விரக்தியுடன் இருந்த வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் சிட்டியின் இந்த கோல் முயற்சியையாவது தடுக்க பாய்ந்தார். ஆனால் அவரது இந்த முயற்சியும் தோல்வியில் முடிய ஸ்டெர்லிங் தமது ‘ஹாட்ரிக்’கை நிறைவுசெய்தார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

வாட்ஃபர்ட்டை ஊதித் தள்ளிய மேன்சிட்டி