‘யுனைடெட்டில் இணைய போக்பா முக்கிய காரணம்’

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டில் தாம் இணைவதற்கு பால் போக்பா முக்கிய காரணமாக இருந்தார் என்று பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரொமேலு லுக்காக்கு தெரிவித்துள்ளார். லுக்காக்குவை யுனைடெட் 75 மில்லியன் பவுண்ட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. போக்பாவை அடுத்து லுக்காக் குதான் யுனைடெட்டின் இரண் டாவது ஆக விலையுயர்ந்த வீரராவார். போக்பாவை யுனைடெட் கடந்த ஆண்டு 89 மில்லியன் பவுண்ட்டுக்கு ஒப்பந்தம் செய்தது. “எனது உயிர் நண்பர்களில் போக்பாவும் ஒருவர். அதுமட்டு மல்லாது அவர் எனது அண்டைவீ ட் டு க்கார ரு ம் கூ ட , ” என்று லுக்காக்கு தெரிவித்தார்.

“நாங்கள் இருவரும் நாள்தோறும் சந்தித்துக்கொள் வோம். அப்போது அவர் யுனைடெட்டில் அவருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார். அவர் யுனைடெட்டில் இணைந்தபோது எனக்கும் யுனை டெட்டில் இணைய வாய்ப்பு கிடைத்தால் அதை மறுக்க மாட்டேன் என்று முடிவெடுத்தேன்,” என்றார் லுக்காக்கு. இதற்கு முன்பு லுக்காக்கு எவர்ட்டனுக்கு விளையாடினார். யுனைடெட்டில் இணைய லுக் காக்கு எடுத்த முடிவு சரியானது என்று எவர்ட்டன் நிர்வாகி ரோனல்ட் கோமன் தெரி வித்துள்ளார். ரொமேலு லுக்காக்கு. படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon