இந்தியாவுக்கான முதல் சிங்கப்பூர் தூதர் காலமானார்

முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூர் தூதர் மோரிஸ் பேக்கர் (படம்) நேற்று தமது 97வயது வயதில் காலமானார். இந்தியாவுக்கான முதல் சிங்கப் பூர் தூதராக நியமிக்கப்பட்ட திரு பேக்கர் நேப்பாளத்துக்கான தூதுவ ராகவும் பிலிப்பீன்சுக்கான தூதராக வும் பணியாற்றினார். 1969 முதல் 1971 வரையிலும் 1980 முதல் 1988 வரையிலும் மலேசியாவுக்கான சிங் கப்பூர் தூதராக அவர் இருந்தார். அவருடைய இளைய மகன் பெர் னார்ட், 60, நியூசிலாந்துக்கான சிங் கப்பூர் தூதராக உள்ளார். தமது தந்தை மரணமடைந்த செய்தியை அவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித் தாளிடம் பகிர்ந்துகொண்டார்.