அதிபர் தேர்தலில் போட்டியிட மேலும் ஒருவர் விருப்பம்

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக் கும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ‘போர்போன் ஆஃப் ஷோர் ஆசியா பசிபிக்’ என்னும் கடற்துறை சேவை நிறுவனத்தின் தலைவர் ஃபாரிட் கான் கைம் கான், 62, அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வில்லேஜ் ஹோட்டல் சாங்கியில் செய்தியாளர்களிடம் பேசினார். சிறுபான்மை சமூகத்தைப் பிரதி நிதிப்பதை உறுதி செய்வதற்காக அதிபர் தேர்ந்தெடுப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

மலாய் சமூகத்திற்காக அதிபர் பதவி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அதில் போட்டியிடப் போவதாக அறிவித் திருக்கும் இரண்டாவது நபர் திரு ஃபாரிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், செகண்ட் சான்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது சாலே மரிக்கான் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இவர்கள் தவிர, நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படு கிறது. இருப்பினும் அது தொடர் பான தமது முடிவை அவர் இன் னும் அறிவிக்கவில்லை.

ஃபாரிட் கான் கைம் கான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த புதனன்று வெளியிடப்பட்ட புதிய ‘எம்ஆர்டி கட்டமைப்பு’ வரைபடம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

14 Dec 2019

புதிய எம்ஆர்டி வரைபடத்திற்கு நல்ல வரவேற்பு

மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று அங் மோ கியோ அவென்யூ 5ல் உள்ள பெல் கிராவியா வீடமைப்பு களுக்கான கட்டுமானத் தளத்துக்கு வருகை அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

பாதுகாப்பு நடைமுறைகளைப் பார்வையிட்டார் அமைச்சர் ஸாக்கி

தமிழில் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் உரையாடுகிறார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான
திரு விக்ரம் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Dec 2019

குதூகலத்துடன் தமிழைக் கற்க ஒரு சுற்றுலா