சுடச் சுடச் செய்திகள்

கத்திக்குத்தில் ஆடவர் மரணம்; அண்டை வீட்டார் அதிர்ச்சி

பரபரப்பான ஷென்டன் வே பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகலில் குத்திக் கொல்லப்பட்ட ஆடவர் அக்கம்பக்கத்தாருடன் நல்ல முறையில் பழகியவர் என்று அவரது அண்டை வீட்டார் தெரி வித்துள்ளனர். செனட் லேன் பகுதியில் வசித்துவந்த திரு ஸ்பென்சர் டுப்பானி ஷாம்லால் டுப்பானியை ‘நல்ல மனிதர்’ என்று குறிப் பிட்டதோடு அவரது மரணச் செய்தியை அறிந்து நம்ப இய லாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். 38 வயதான திரு ஸ்பென்சர் டுப்பானி, பூன் டாட் ஸ்திரீட்டில் உள்ள ‘எ போக் தியரி’ உணவுக் கடைக்கு வெளியே ரத்த வெள் ளத்தில் தலைகுப்புற விழுந்து கிடந்தார். திரு டுப்பானியைக் கத்தியால் குத்தியதாக 69 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். திரு டுப்பானியின் மாமனார் என்று அவர் தம்மைக் கூறிக்கொண்டார். “ஸ்பென்சர் நற்பண்பு மிக்க வர். என்னைப் பார்க்கும்போதெல் லாம் ‘ஹாய் அண்ட்டி’ என்று மரியாதை செலுத்துவார்.

இரண்டு தினங்களுக்கு முன்புகூட அவர் ‘ஹாய்’ சென்னார்,” என்று திரு டுப்பானியின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் திருமதி யோங் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித் தாளிடம் கூறினார். திரு டுப்பானியின் மாமனாரும் அதே வீட்டில் வசித்தார் என்றும் அவர் அதிகம் பேசாத குணமுடை யவர் என்றும் திருமதி யோங் குறிப்பிட்டார். ரத்தவெள்ளத்தில் கிடந்த டுப் பானிக்கு உதவி செய்ய முன்வந்த ‘எ போக் தியரி’ கடையின் பணியாளர் வின்னி ஆங், டுப் பானியைக் குத்திய நபர் தம்மைப் புறந்தள்ளியதோடு, “அவர் எனது மருமகன். அவருக்கு உதவ வேண் டாம். அவர் மாண்டுபோகட்டும்,” என்று கூறியதாகச் சொன்னார். மேலும், டுப்பானியைக் கத்தி யால் குத்திய நபர் கைபேசியில், “நான் ஏற்கெனவே அவரைக் கத்தியால் குத்திவிட்டேன். அழ வேண்டாம். எனக்கு வயதாகி விட்டது. சிறைக்குச் செல்வதற்கு நான் பயப்படவில்லை. நடந்தது நடந்ததுதான்,” என்று கூறியதாக வின்னி ஆங் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon