காமராஜர் விழா; விடுமுறையில் செல்ல ஆசிரியர்களுக்குத் தடை

திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா ஜூலை 15ஆம் தேதி அன்று கல்வி வளர்ச்சி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட வேண்டும் என்று அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, அவரது எளிய வாழ்க்கை, ஆட்சியின் சாதனை, கல்வி வளர்ச்சிப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்குக் கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தமிழக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon