நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு ஆகஸ்ட் 9க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: தமிழக முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்துக்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக் கறிஞரும் நியமிக்கப்பட்டுள்ளார். “முதல்வர் பழனிசாமி அரசு மீது முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யவேண்டும். “புதிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாபா. பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் உதவி செய்யு மாறு தலைமை சட்ட அதிகாரியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த தலைமைச் சட்ட அதிகாரி உதவி வழங்கவும் மறுத்துவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியலமைப்பு சட்டத்தின் 212வது பிரிவின் கீழ் சட்டமன்றம் தொடர்பான விவ காரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். இந்த வழக்கில் உச்ச நீதி மன்றத்திற்குச் சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக் கறிஞர் ரஞ்சித் குமார் நியமிக்கப் பட்டார். ஆனால் அவருக்கு அவ காசம் தேவைப்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon