சுடச் சுடச் செய்திகள்

பாலச்சந்தர் ஒரு மகா கலைஞன்: கவிஞர் வைரமுத்து புகழாரம்

பாலச்சந்தர் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல என்றும் அவர் ஒரு நிறுவனம் என்றும் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. தனது முதல் படத்துக்கு ‘நீர்க் குமிழி’ எனப் பெயரிட்டு தமிழ்த் திரையுலகில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர் என்றும் அவர் கூறியுள்ளார். காலஞ்சென்ற இயக்குநர் பாலச் சந்தரின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். அங்கு அவர் பிறந்த வீடு தற்போது பள்ளிக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. அப்பள்ளியின் வாயிலில் பாலச் சந்தருக்கு சிலை வைக்கப்பட கவிஞர் வைரமுத்து முயற்சி மேற்கொண்டார்.

அந்த வெண்கலச் சிலையின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய வைரமுத்து, கலையாக வந்தவன் இந்த இடத்தில் தான் பாலச்சந்தர் சிலையாகப் போகி றார் என்பதை காற்று அறிந்திருக்காது எனக் குறிப்பிட்டார். “பாலச்சந்தர் படங்களில் வெற்றிப் படங்கள், தோல்விப் படங்கள் என்பது இல்லை. புரிந்துகொள்ளப்பட்ட படங் கள், புரிந்துகொள்ளப்படாத படங்கள் என்றுதான் உள்ளன. “பாலச்சந்தரிடம் பாட்டு எழுதுவது என்பது மிகக் கடினமானது. ஒருவரின் உச்சபட்ச திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய ஆற்றல் மிக்கவர். பாலச் சந்தர் ஒரு மகா கலைஞன். அவர் இல்லையென்றால் ஒரு புதிய தலை முறை தோன்றியிருக்காது,” என்றார் வைரமுத்து.

மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon