பாரிசில் புயல் மழை

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஞாயிற்றுக்கிழமை வீசிய புயல் காற்றைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இது ஒரு மாத;திதல் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். பாரிசின் புறநகர்ப் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் புயலால் சேதம் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.