விஷால்: உழைப்பு இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும்

‘வி மியூசிக்’ என்ற பெயரில் இசை நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகர் விஷால். இந்நிறுவனம் தனது முதல் வெளியீடாக ‘சகுந்தலாவின் காதலன்’ என்ற படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இயக்கு நர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, நடிகர் கள் கருணாஸ், மன்சூர் அலிகான், உதயா, விஷால், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ‘காதலில் விழுந்தேன்’ படத்தை இயக்கிய பி.வி.பிரசாத் எழுதி இயக்கி தயாரித்து நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சகுந்தலாவின் காதலன்’. பானு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தமிழ்த் திரைப்படங்களின் பாடல் உரிமைக்கு மிகக் குறைந்த விலையே பேசப் படுகிறது என்றும் இந்நிலை மாற வேண்டும் என்றும் கூறினார்.

“ஒரு இயக்குநராக, தயாரிப்பாள ராக, கதை நாயகனாக, இசை அமைப் பாளராக இப்படத்தில் அவர் சிறப் பாகப் பணியாற்றி இருப்பதை முன் னோட்டம், பாடல்களைக் காணும்போது உணரமுடிகிறது. “அத்துடன் ‘வேலையில்லா விவ சாயி’ என்ற புதிய படத்தையும் இதே விழாவில் தொடங்குகிறார். எங்கே கடின உழைப்பு இருக்கிறதோ அங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த உழைப்பு பிரசாத்திடம் இருப்பதால் அவருக்கு வெற்றி கிடைக்கும்,” என்றார் விஷால். ஜிஎஸ்டி வரியால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப் பிட்ட அவர், தமிழக அரசின் கேளிக்கை வரியும் பெரிய சுமையாக உருவெடுத்து இருப்பதாகத் தெரிவித் தார்.

‘சகுந்தலாவின் காதலன்’ படத்தில் பிரசாத், பானு.