கிராமத்து இளையருக்காக படம் எடுக்கும் பண்ணையார்

கிராமத்து இளைஞனின் சினிமா கனவை ஊர் பண்ணையார் நிறை வேற்றி வைக்கும் கதையைச் சொல்ல வருகிறது ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற புதிய படம். இதில் அகில் நாயகனாகவும் இஷாரா நாயர் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் ரஹானா, சகானா, கிருஷ்ணபிரியா என கூடுதலாக மூன்று இளம் நாயகி கள் அறிமுகமாகின்றனர். இவர்களைத் தவிர ‘நான் கட வுள்’ ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், கௌசல்யா, ஷகீலா ஆகியோரும் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்றுள்ளனர். தினமும் சென்னைக்கு நூற்றுக் கணக்கானோர் பிழைப்பு தேடி பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருகிறவர்களில் குறைந் தது நூறு பேராவது சினிமா கனவு களுடன் வருகின்றனர் என்பதே உண்மை. “அப்படி சினிமாவிற்காக சென்னை வந்து வாய்ப்பு கிடைக் காமல் ஊருக்கே திரும்பிச் செல் லும் கதாபாத்திரத்தில் நாயகன் அகில் நடிக்கின்றார்,” என்கிறார் இயக்குநர் கெவின்.

‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தில் அகில், இஷாரா.