நடுவானில் விமானக் கதவை திறக்க முயன்றவர் கைது

ஜார்க்கண்ட்: நடுவானில் பறந்துகொண்டு இருந்த விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் வேளையில் அதன் அவசர வழிக் கதவைத் திறக்க முயன்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை டெல்லியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி நோக்கிச் சென்றுகொண்டு இருந்த ஏர்ஏ‌ஷியா விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற அஃப்தாப் அகமது, 32, விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் விளக்கிய ஏர்ஏ‌ஷியா விமான நிறுவனத்தின் பேச்சாளர் விமானத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பயணி மேல் விசார ணைக்காக இந்தியாவின் மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறி னார்.

அந்த நபர் கதவைத் திறக்க முயன்றதன் நோக்கம் பற்றியோ அப்போது அவர் எந்த நிலைமையில் இருந்தார் என்பது பற்றியோ அதிகாரிகள் விவரிக்கவில்லை. ராஞ்சியைச் சேர்ந்த அஃப்தாப் அகமது நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருக்கையில் திடீரென எழுந்து சென்று அவசர வழிக் கதவைத் திறக்க முயன்றபோது சக பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் அவரைத் தடுத்தனர். தம்மைத் தடுக்க வந்த வர்களை அவர் காயப் படுத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார். விமானத்திற்குள் மூர்க்கத் தனமாக நடந்து கொள்வோரை விமானப் பயணத் தடை பட்டிய லில் சேர்க்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்ட இரு மாதங்க ளில் இச்சம்பவம் நிகழ்ந்துள் ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இண்டிகோ விமானம் ஒன்று மும்பையிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது அதன் அவசர வழிக் கதவை பயணி ஒருவர் திறந்த சம்பவம் அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல அரசியல்வாதிகள் பலரும் விமானப் பயணங்களின்போது விமான ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரு கின்றன. எனவே, தகாத வார்த்தை களால் திட்டுவது, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது, கடுமையாகத் தாக்குவது, விமானத்துக்குச் சேதம் ஏற்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவோரை விமானப் பயணத் தடை பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon