வட இலங்கையில் தமிழ் இளையர் சுட்டுக்கொலை, பதற்றம்

வடஇலங்கையான யாழ்ப்பாணத்தில் தமிழ் இளையர் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாகப் பெரும் பதற்றம் நிலவியது. பருத்தித்துறை அருகிலுள்ள துன் னாலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த யோகராசா தினேஷ், 24, என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மணல் லாரி ஒன்றின் மீது அமர்ந்திருக்கையில் அந்த லாரியை துரத்திச் சென்ற போலி சார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. சுடப்பட்ட தினேஷ் அந்த இடத்தி லேயே மாண்டார். அதனைத் தொடர்ந்து அவரது கிராமமான துன்னாலை, கரவெட்டி போன்றவற்றை உள்ளடக்கிய வடமராட்சியில் மக்கள் கொந்தளித்த னர். ஞாயிறு இரவே அவர்கள் கும் பலாகத் திரண்டு சென்று வாகனங் களைத் தாக்கினர். சாலைகளில் டயர் களைக் குவித்து எரித்து தங்களது ஆத் திரத்தை வெளிப்படுத்தினர். போலி சாரின் வாகனங்கள் தாக்கப்பட்டன. வன்செயலில் மக்கள் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலிசாரும் சிறப்பு அதி ரடிப் படையினரும் வடமராட்சியில் குவிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் பருத்தித்துறை காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தக் காவல் நிலையத்திற்குக் கடுமையான பாது காப்பு போடப்பட்டது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை போலிசார் தடுத்து நிறுத்தியபோது லாரி நிற்காமல் சென் றது என்றும் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற போலிசார் லாரியை நோக்கிச் சுட்டதாகவும் கூறப்பட்டது. லாரியில் தப்பிச் சென்ற மேலும் இரு தமிழர்கள் தேடப்பட்டு வருவதாக போலிஸ் கூறியது. இச்சம்பவம் தொடர்பில் சஞ்சீவன், முகமது முபாரக் என்னும் இரு போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர்.

போலிஸ் வேலையிலிருந்து அவ்விரு வரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தாகவும் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசா ரணைக் குழு அமைக்க தலைமைப் போலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ள தாகவும் போலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மாண்ட தினே‌ஷின் இறுதிச் சடங் குகள் நேற்று முன்தினம் நடந்தபோது வடமராச்சியில் கடும் பதற்றம் நிலவி யது. ஏராளமான போலிசார் குவிக்கப் பட்டனர். மணல் கடத்தல் லாரியை மடக்கிப் பிடிக்க அதன் டயரில் சுட வேண்டிய போலிசார், தினேஷைக் குறிபார்த்துச் சுடவேண்டிய அவசியம் என்ன என்று துன்னாலை கிராமத்தினர் கேள்வி எழுப்பினர். தினே‌ஷின் தந்தையும் மைத்துனரும் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலிசாரைக் கண்டித்து போராட்டத்தில் குதித்த மக்கள். (உள்படம்) மேல்படம்) துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான யோகராசா தினேஷ், 24. படம்: இலங்கை ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!