சுடச் சுடச் செய்திகள்

பொதுச் சேவைக்கு வலுவான தொழில்நுட்பத் திறன்கள்

அரசாங்கச் சேவை தொழில் நுட்பத் துறைகளில் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் அதே சமயத்தில் படைப்பாற்றலுடன் திகழ்ந்து, புதிய யோசனைகளை வரவேற்கவேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று கூறினார். பொதுச் சேவை ஆணை யத்தின் உபகாரச் சம்பள விரு தளிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைய உலகமயச் சூழலில் சிங்கப்பூர் புதிய சவால் களையும் நிச்சயமற்ற சூழ்நிலை களையும் எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டார். “உலகளாவிய வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் துணை புரிந்த தடையற்ற வர்த்தகம், திறனாள ரையும் குடியேறிகளையும் வர வேற்கும் தாராளக் கொள்கை, பாதுகாப்பான நடைமுறைச் சூழல் போன்ற பல உந்துசக்திகள், வளர்ச்சியடைந்த நாடுகள் பல வற்றிலும் இப்போது மெத்தன மாகக் கருதப்படுவதில்லை,” என்றார் அவர்.

“உலகெங்கிலுமுள்ள அரசாங் கங்கள் வெற்றிக்கான புதிய பாதைகளையும் வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் தேடுகின் றன,” என்றும் அவர் குறிப்பிட் டார். கிராண்ட் காப்தார்ன் வாட் டர்ஃபிரன்ட் ஹோட்டலில் நடை பெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் மொத்தம் 71 உபகாரச் சம் பளங்கள் வழங்கப்பட்டன. தொடக்கக் கல்லூரிகள், பல துறைத் தொழில்கல்லூரிகள் உள்ளிட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் உபகாரச் சம்பளங் களைப் பெற்றனர். ஈராயிரத் துக்கும் மேற்பட்ட விண்ணப்பங் களிலிருந்து இவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். பொறியியல், மின்னிலக்க வியல், இவை சார்ந்த இணையப் பாதுகாப்பு போன்ற துறைகள் ஆகியவற்றில் தொழில்நுட்பத் திறன்கள் கொண்ட அதிகமான அதிகாரிகள் அரசாங்கச் சேவைக்குத் தேவைப்படுவதாக அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டியோ கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon