‘மெட்ரோ’ வாரிசுக்கு ஈராண்டு சிறை

கஞ்சா வாங்க முயன்றதற்காக ‘மெட்ரோ’ நிறுவனரின் பேரன் 42 வயது ஓங் ஜென்னுக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2014 அக்டோபர் 30, 31ஆம் தேதிகளில் 385.1 கிராம் கஞ்சா கலவையையும் 92.68 கிராம் கஞ்சாவையும் தன்வசப்படுத்த முயன்றதை ஓங் ஒப்புக் கொண்டார். கவனக் குறைபாடு, தூக்கமின்மை பிரச்சினைகளால் தான் தவித்து வந்ததாகவும் அவற்றைத் தவிர்க்க போதைப்பொருள் உதவியதாகவும் நீதிமன்ற விசாரணையின்போது ஓங் குறிப்பிட்டார்.