1எம்டிபி விவகாரம்: முன்னாள் வங்கி அதிகாரிக்கு 54 மாதம் சிறை

மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘1எம்டிபி’யில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பில்லியன்கணக்கான டாலர் பண முறைகேடு தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியது, பண மோசடி ஆகிய குற்றங்களுக்காக முன்னாள் பிஎஸ்ஐ சிங்கப்பூர் வங்கி அதிகாரியான இயோ ஜியாவைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 54 மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுநாள் வரை, 1எம்டிபி விவகாரம் தொடர்பில் ஒரு சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தில் ஆகக் கூடியது இதுதான். தன் மீதான இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் 34 வயதான இயோ. தண்டனை விதிக்குமுன் அவர் மீதான மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஷங்காய் நகரிலுள்ள ஷாங்ஜியாங் அனைத்துலக புத்தாக்கத் துறை முகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மனித இயந்திரத்தை இயக்கியப் பார்க்கிறார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

26 May 2019

ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்