தவறான தமிழ் அச்சு: மன்னிப்புக் கோரியது ஏற்பாட்டுக் குழு

தேசிய தின அணிவகுப்புக்கு முன்னால் நடக்கும் தேசிய கல்விக் காட்சியின்போது விநியோகிக்கப் பட்ட கையேடுகளில் இவ்வாண் டின் கருப்பொருள் தவறாக அச் சிடப்பட்டிருந்தது. அப்பிழைக்காக தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கர்னல் மெல்வின் ஓங் யோக் லாம் மன்னிப்புக் கோரி இருக்கிறார். தொடக்கநிலை 5 மாணவர் களுக்காக நடத்தப்படும் தேசிய தின அணிவகுப்பின் முன்னோட் டக் காட்சியான தேசிய கல்விக் காட்சியைக் காண்பதற்கு முன் னால் கிட்டத்தட்ட 162 பள்ளி களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கையேடுகள் வழங்கப்பட்டன. அவற்றில் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் ‘ஒரே தேசமாக ஒன்று சேர்வோம்’ எனும் கருப்பொருள், எழுத்துருப் பிரச்சி னையால் சில எழுத்துகள் இடம் மாறியும் சில எழுத்துகள் தவறா கவும் அச்சிடப்பட்டிருந்தன. தேசிய தின அணிவகுப்பு 2017 ஏற்பாட்டுக்குழு நேற்று முன் தினம் இரவு வெளியிட்ட அறிக்கை யில், அந்த பிழைக்காக வருத்தம் தெரிவித்தது.

தமிழ் எழுத்துகள் தவறாக அச்சிடப்பட்ட கையேடும் திருத்தப்பட்ட கையேடும் (வலது). படங்கள்: தேசிய தின அணிவகுப்பு 2017 ஏற்பாட்டுக் குழு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon