சிங்கப்பூர்-இந்தியா உறவைப் பறைசாற்றும் கொண்டாட்டம்

வில்சன் சைலஸ்

சிங்கப்பூர் - இந்தியா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஆழமான பொருளியல், கலாசார உறவைக் கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வாரக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையும் (சிக்கி) ‘குளோபல் சிட்டிசன் ஃபோரம்’ எனும் அனைத் துலக குடிமக்கள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கொண்டாட்டம் சிங்கப் பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இடம்பெறும். ‘ஓ ரே பியா’ போன்ற பாடல் களின் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த பாகிஸ்தானிய பாடகர் ரஹத் ஃபத்தே அலி கானின் இசை விருந்துடன் தேசிய தினத் தன்று தொடங்கும் ஒரு வார கொண்டாட்டம், வர்த்தக மாநாடு, கலாசார விருந்துகள், விளையாட்டு போட்டிகள், இளையர் கொண் டாட்டம் எனப் பல நிகழ்ச்சிகளுடன் களைகட்டவுள்ளது.

ஆகஸ்ட் 9 முதல் 15 வரை இடம்பெறவுள்ள கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து) சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் பீட்டர், தொழிற்சபையின் தலைவர் டாக்டர் ஆர் தேவேந்திரன், ‘அனைத்துலக குடிமக்கள் மன்ற’ நிறுவனர் டாக்டர் பி.கே.மோடி. படம்: திமத்தி டேவிட்