விராத் கோஹ்லியோடு கைகோர்க்கும் சாஸ்திரி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஸாகிர் கான் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் ராகுல் டிராவிட் டெஸ்ட் தொடர்களுக் கான பந்தடிப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கும்ளேயின் பயிற்றுவிப்பாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும் கோஹ்லிக்கும் அவரு க்கும் இடையே மோதல் ஏற்பட்ட தாலும் கும்ளேயின் பயிற்று விப்பாளர் பதவிக்காலம் நீட்டிக்கப் படவில்லை. வெற்றியாளர் கிண்ணத் தொடருடன் தனது பதவியில் இருந்து விலகினார் கும்ளே. எனவே புதிய பயிற்றுவிப்பா ளரைத் தேடும் பணியைத் தொடங்கியது கிரிக்கெட் வாரியம். விண்ணப்பங்கள் பெறப்பட்டுத் திங்கட்கிழமை புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நடந்தது. அதையடுத்து இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படு வார் என்று ஆலோசனை குழு வினர் தெரிவித்திருந்தனர். ஆனால் 11ஆம் தேதிக்குள் புதிய பயிற்றுவிப்பாளரின் பெயரை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாக குழுவின் தலை வர் வினோத் ராய் கூறியிருந்ததை அடுத்து, தலைமை பயிற்றுவிப் பாளராக ரவி சாஸ்திரி நேற்று முன்தினம் இரவு நியமிக்கப்பட் டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ரவி சாஸ்திரி நீடிப்பார். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்