டென்னிஸ்: சாதனை பெண்கள் மோதும் அரையிறுதிப் போட்டி

லண்டன்: ஜோகன்னா கோன்டா, வீனஸ் வில்லியம்ஸ் ஆகிய இரு வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் சாதனை பெண் களாக வலம் வருகின்றனர். சாதனை பெண்களான இவர் கள் இன்றைய அரையிறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். ஜோகன்னா கோன்டா (படம்) கடந்த 39 ஆண்டுகளில் விம்பிள் டன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியுள்ள முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையைப் பெற்று உள்ளார். இவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை ருமேனிய வீராங் கனையான ‌ஷிமோனா ஹலப்பை 6-7, 7-6, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்.

39 வயதான வீனஸ் வில்லி யம்ஸ் 10வது முறையாக விம் பிள்டன் அரை இறுதியில் நுழைந் தார். இதன் மூலம் அனைத்து இங்கிலாந்து குழுக்களின் மூத்த வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் மார்ட்டினா நவ்ரத்திலோவோ இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். இன்று நடைபெறவுள்ள அரை இறுதியின் ஒரு போட்டியில் ஜோகன்னா கோன்டா-வீனஸ் வில்லியம்சும், மற்றொரு போட்டி யில் முகுருசா- ரைபரி கோவாவும் மோதுகிறார்கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon