பீர் டின்னை ‘லக்கேஜில்’ சேர்த்த பயணி

பெர்த்: மதுபானப் பிரியரான ஆஸ்திரேலியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மெல்பர்ன் விமான நிலையத்திற்கு வந்த போது ஒரே ஒரு பீர் டின்னை மட்டும் கொண்டு வந்திருக் கிறார். அவர் கொண்டுவந்த ஒரே ஒரு லக்கேஜ் அந்த பீர் டின் மட்டுமே. அங்கிருந்து குவாண்டாஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பயணப்பெட்டிகள் சோதனை செய்யும் இடத்தில் அந்த பீர் டின்னை சோதனை செய்த அவர் அதை விமானத்தில் அனுப்பியிருக்கிறார்.

அந்த பீர் டின் பத்திரமாக பெர்த் விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. பயணிகள் தங்கள் பயணப் பெட்டிகளைச் சேகரிக்கும் இடத்தில் ஒரே ஒரு பீர் டின் மட்டும் சுற்றிவந்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த நான்கு மணி நேர பயணத்தில் எந்தவித சேதமும் இல்லாமல் அந்த பீர் டின் பத்திரமாக வந்துசேர்ந்தது தனக்கு வியப்பாகவும் அதே சமயத்தில் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று அந்த ஆஸ்திரேலியர் கூறியுள்ளார். அந்த ஆஸ்திரேலியரின் பெயர் வெளியிடப்படவில்லை.

பயணிகள் தங்கள் பயணப்பெட்டிகளை சேகரிக்கும் இடத்தில் ஒரே ஒரு பீர் டின் மட்டும் சுற்றிவந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. படம்: ஏஎஃப்பி