19 வயதில் மருத்துவராகவுள்ள மலேசிய மாணவி

கோலாலம்பூர்: மலேசியாவில் மருத்துவத் துறையில் படிக்கும் 19 வயதுப் பெண் அடுத்த ஆண்டு டாக்டர் பட்டம் பெறவுள்ளார். அவர் மருத்துவராகிவிட்டால் மலேசியாவின் ஆக இளவயது மருத்துவர் என்ற பெருமை அவரையே சாரும். சான் ஹோ ஷான் என்ற அந்த மாணவி தற்போது டெய்லர் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிப்பதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மாணவி சான் எட்டு வயது சிறுமியாக இருந்தபோது அவரின் தாயாருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது முதல் தான் ஒரு மருத்துவராக வர வேண்டும் என்று அவர் விரும்பினாராம். அத்துடன் சிறு வயது முதலே மனிதனின் உடலைப் பற்றியும் மனித உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றியும் அறிந்துகொள்ள தான் மிகவும் ஆர்வமாக இருந்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.