வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவி

தோக்கியோ: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணி விரைவில் தொடங்கும் என்றும் அதற்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என்றும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்கோ அபே உறுதியளித்தார். ஜப்பானின் தெற்குப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். இன்னும் 23 பேரைக் காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Loading...
Load next