சம்பத்: மக்களை பாதிக்கும் திட்டத்துக்கு அனுமதியில்லை

சென்னை: மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சட்டப்பேரவை யில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கதிராமங்கலம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டங்களைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார். செவ்வாய்க்கிழமை சட்டப்பேர வையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கதிராமங்கலத்தில் நடை பெற்று வரும் தொடர் போராட்டங் களைக் குறிப்பிட்டு பேசினார்.

"கதிராமங்கலத்தில் எண் ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திலும் போராட் டம் தொடர்கிறது.

"இந்தத் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு கூறினாலும் மத்திய பாஜக அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது," என்றார் மு.க.ஸ்டாலின். கதிராமங்கலத்தில் சுமுகநிலை திரும்ப வேண்டுமானால், போராட் டத்தின் போது கைது செய்யப்பட்ட பொதுமக்கள் மீது பதிவாகியுள்ள வழக்குகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் மேலும் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சம்பத், பொதுமக்கள், விவசாயிகள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

குறிப்பாக, கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் பொது மக்களால் எதிர்க்கப்படும் இரு திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்த, தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் சம்பத் தெளிவுபடுத்தினார். "ஹைட்ரோகார்பன், எண் ணெய் எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பாக பிரதமரிடம், முதல்வர் பழனிசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார்.

"தமிழக அரசு ஏற்காத வரை இந்தத் திட்டங்களை செயல் படுத்த மாட்டோம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது," என்றார் அமைச்சர் சம்பத்.

அமைச்சர் சம்பத் படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!