சுடச் சுடச் செய்திகள்

பரோல் கோரும் ரவிச்சந்திரன்

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை அளிக்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது மகன் பரோலில் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டால் மீண்டும் பரோல் கேட்க உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து இரு வாரங்களுக்குள் உள்துறை செயலர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் மதுரை சிறைத் துறை கண்காணிப்பாளர், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ரவிச்சந்திரன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon