கச்சத்தீவை மீட்போம்: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை: சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு காரணம், கடந்த 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்தது தான் காரணம் என்றும், கச்சத் தீவை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். “நம் மீனவர்கள், தங்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என இலங்கை கூறுவதை ஏற்க முடியாது.  இந்த அரசு, கச்சத்தீவை கண்டிப்பாக மீட்கும்,” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.