பூங்குன்றன் பெயரில் உள்ள ரூ.350 கோடி

புதுடெல்லி: ஜெயலலிதாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் பெயரில் உள்ள ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தமிழக ஊட கம் தெரிவித்துள்ளது. இச்சொத்துக்கள் அவருக்கு மட்டுமே சொந்தமானதா? அல்லது ஜெயலலிதாவின் சொத்துக்களா? என்று டெல்லியில் வைத்து அவரிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. மேலும், சசிகலா குடும்பத்தின் பினாமியாக பூங்குன் றன் செயல்பட்டாரா? என்கிற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்ததாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.