டியோ: வர்த்தக வெற்றிக்கு மலாக்கா நீரிணை திறவுகோல்

முக்கியமான கடல் பாதைகளைத் திறந்து வைத்திருப்பதும் பாது காப்பாக வைத்துருப்பதுமே கடல் துறை வர்த்தகப் பாதையின் வெற்றிக்கு முக்கிய அடிப்படையாக விளங்கும் என்றும் அதன் அடிப்படையில் பார்த்தால் மலாக்கா நீரிணை கப்பல்துறைக்குத் திறந் திருப்பதே வெற்றிக்கு வித்திடும் என்றும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார். பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் வழியாக சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கடல் பாதையை உருவாக்கும் திட்டமே 'மேரிடைம் சில்க் ரோடு' எனும் கப்பல்துறை வர்த்தக்ப் பாதையின் இலக்கு. சிங்கப்பூர், மலாக்கா நீரிணை வழியாக நிலவும் கடல்பாதைக்குத் தடையோ இடையூறோ இருக்கக்கூடாது என்றும் இந்த கடல்பாதை பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முக்கிய கடல்பகுதிகள் என்றும் திரு டியோ கூறினார். மேலும் சிங்கப்பூர், மலாக்கா நீரிணை கப்பல்கள் செல்வதற் கான அனைத்துலக அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் அவை அனைத்துலகச் சட்டத்தின் கீழ் செயல்படும் என்றும் திரு டியோ சுட்டினார்.

எதிர்கால சீனா உலக மாநாட்டில் நேற்று பேசிய திரு டியோ இக்கருத்துக்களை முன் வைத்தார். சிங்கப்பூர், மலாக்கா நீரிணை வழியாகச் செல்வதற்கு அனைத்து நாடுகளையும் சேர்ந்த விமானங்களுக்கும் கப்பல் களுக்கும் இருக்கும் உரிமை குறித்து சிங்கப்பூரின் நிலைப் பாட்டைத் துணைப் பிரதமர் விளக்கினார். "சிங்கப்பூர் இந்த உரிமையின் வலுவான ஆதரவாளர். வர்த் தகம்தான் எங்கள் வாழ்வாதாரம் என்பதால் இந்த கோட்பாடுகளில் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு," என்றார் திரு டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!