டியோ: வர்த்தக வெற்றிக்கு மலாக்கா நீரிணை திறவுகோல்

முக்கியமான கடல் பாதைகளைத் திறந்து வைத்திருப்பதும் பாது காப்பாக வைத்துருப்பதுமே கடல் துறை வர்த்தகப் பாதையின் வெற்றிக்கு முக்கிய அடிப்படையாக விளங்கும் என்றும் அதன் அடிப்படையில் பார்த்தால் மலாக்கா நீரிணை கப்பல்துறைக்குத் திறந் திருப்பதே வெற்றிக்கு வித்திடும் என்றும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார். பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் வழியாக சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கடல் பாதையை உருவாக்கும் திட்டமே ‘மேரிடைம் சில்க் ரோடு’ எனும் கப்பல்துறை வர்த்தக்ப் பாதையின் இலக்கு. சிங்கப்பூர், மலாக்கா நீரிணை வழியாக நிலவும் கடல்பாதைக்குத் தடையோ இடையூறோ இருக்கக்கூடாது என்றும் இந்த கடல்பாதை பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முக்கிய கடல்பகுதிகள் என்றும் திரு டியோ கூறினார்.

மேலும் சிங்கப்பூர், மலாக்கா நீரிணை கப்பல்கள் செல்வதற் கான அனைத்துலக அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் அவை அனைத்துலகச் சட்டத்தின் கீழ் செயல்படும் என்றும் திரு டியோ சுட்டினார். எதிர்கால சீனா உலக மாநாட்டில் நேற்று பேசிய திரு டியோ இக்கருத்துக்களை முன் வைத்தார். சிங்கப்பூர், மலாக்கா நீரிணை வழியாகச் செல்வதற்கு அனைத்து நாடுகளையும் சேர்ந்த விமானங்களுக்கும் கப்பல் களுக்கும் இருக்கும் உரிமை குறித்து சிங்கப்பூரின் நிலைப் பாட்டைத் துணைப் பிரதமர் விளக்கினார். “சிங்கப்பூர் இந்த உரிமையின் வலுவான ஆதரவாளர். வர்த் தகம்தான் எங்கள் வாழ்வாதாரம் என்பதால் இந்த கோட்பாடுகளில் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு,” என்றார் திரு டியோ. அதே வேளையில் இந்த கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பதால் அது சிங்கப்பூர், மலாக்கா நீரிணைகளில் சீரான வர்த்தகப் போக்குவரத்தை உறுதிப் படுத்தி கடல்துறை வர்த்தகப் பாதையின் வெற்றிக்கு வழிவகுக் கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து நாடுகளையும் சேர்ந்த கப்பல்களும் விமானங்களும் இப்பாதையில் செல்வதற்கான உரிமையை சிங்கப்பூர் எப்போதும் நிலைநாட்டும் என்றும் அவற்றுக்குத் தடை விதிக்க முயற்சிக்கும் எந்த முயற்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றும் திரு டியோ கூறினார். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகியவற்றை பலதரப்பட்ட சாலைகள், கப்பல் துறைமுகங்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், குழாய்கள் ஆகியவை மூலம் இணைக்கும் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ பெருந்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த கப்பல்துறை வர்த்தக்ப் பாதைத் திட்டம்.

‘சிங்கப்பூர், சீனா கூட்டாக செயல்பட 3 அம்சங்கள்’ சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ பெருந்திட்டம் வெற்றியடைய சிங்கப்பூர் சீனாவுடன் ஒத்து ழைக்கும் என்று கூறிய துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் இரு நாடுகளும் ஒன்றித்த செயல்பட மூன்று அம்சங்களையும் சுட்டினார். இந்தத் திட்டம் ஒரு மிகப் பெரிய முற்போக்குச் சிந்தனை யுடன் உருவாக்கப்பட்ட ஒன்று என்று வர்ணித்தார் திரு டியோ. மேலும் இதன் மூலம் இவ்வட்டாரத்தின் மேம்பாட்டுக்கும் ஒன்றிணைப்புக்கும் நீண்டநாள் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அனுகூலங்களைப் பெற முடியும் என்றும் இந்தப் பரந்த வட்டாரத்தின் பொருளியலையும் மக்களையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.