சுடச் சுடச் செய்திகள்

`2 கோடி லஞ்சம் தந்து சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா (படம்) சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தந்து சகல வசதிகளுடன் சொகுசாக இருப்ப தாகப் புகார் எழுந்துள்ளது. “சிறையில் சிறப்புச் சலுகைகள் பெறுவதற்காக கர்நாடக சிறைத் துறைத் தலைமை இயக்குநர் சத்திய நாராயண ராவுக்கு ஒரு கோடி ரூபாயும் மத்திய சிறைச்சாலையின் பாதுகாவலர் உட்பட மற்ற அதிகாரி களுக்கு ஒரு கோடி ரூபாயும் சசிகலா லஞ்சம் கொடுத்துள்ளார்,” என்று சிறைத்துறை துணை ஆய்வாளர் ரூபா முத்கில், திரு ராவுக்கும் போலிஸ் தலைமை இயக்குநரும் தலைமை ஆய்வாளருமான ஆர்.கே.தத்தாவிற் கும் கடிதம் எழுதியிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

ஆயினும், திருவாட்டி ரூபாவின் இந்தக் குற்றச்சாட்டைத் திரு ராவ் மறுத்துள்ளார். “ரூபாவின் குற்றச் சாட்டுகளுக்கு ஆதார மும் விளக்கமும் கேட்டு அவருக்குக் குறிப் பாணை அனுப்பியிருக் கிறேன். அவர் எனக்கு எதிராக அல்லது மற்ற சிறை அதிகாரிகளுக்கு எதிராக எனக்கோ அல்லது மாநில அரசுக்கோ எந்தக் கடிதமும் அனுப்ப வில்லை,” என்று திரு ராவ் விளக்கம் அளித்தார். இவ்வாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டது முதலே 59 வயதான சசிகலா சிறைக்குள் ராணி போல் எல்லா வசதிகளுடன் இருந்து வருகிறார் என்பது திருவாட்டி ரூபாவின் குற்றச்சாட்டு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon