சுடச் சுடச் செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய ஒடிசா எம்எல்ஏ

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சி தலை மையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நவீன் பட்நாயக் முதல மைச்சராக உள்ளார். இந்நிலையில், பிஜூ ஜனதா தள கட்சியின் மல்கங்கிரி தொகு தியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர் மனாஸ் மத்கமி, நபரங்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாலபாத்ரா தங்களது மாவட்டங் களில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை நேற்று முன்தினம் பார்வையிடச் சென்ற னர். இந்த நிகழ்ச்சியின்போது சட்டமன்ற உறுப்பினர் மத்கமி, சேறும் சகதியுமாகக் கிடந்த பகுதியைக் கடக்க வேண்டியிருந் தது. தனது காலணி சேற்றில் சிக்கிக்கொள்ளப் போகிறதோ என்ற யோசனையில் சேற்றில் காலடி எடுத்து வைக்க அவர் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டர்கள் இருவர் அவரை அப்படியே தூக்கிச் சென்று சேறு இல்லாத பகுதியில் பத்திர மாக இறக்கி விட்டனர்.

அவருடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலபத்ரா என்பவர் தொண்டர்களின் உதவியின்றி சேற்றில் நடந்து வந்தார். அந்தக் காட்சியை அங்கு கூடியிருந்தவர் களில் ஒருவர் படம்பிடித்து இணை யத்தில் உலவ விட்டு விட்டார். இப்போது அந்தக் காணொளி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து எம்.எல்.ஏ. மத்கமி கூறுகையில், “நான் தொண்டர்களைக் கட்டாயப் படுத்தி எதையும் செய்யச் சொல்ல வில்லை. என் மீதுள்ள பாசத்தால் அவர்கள் இவ்வாறு செய்தனர்,” என்றார். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டபோது இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் மனாஸ் மத்கமியை அவரது தொண்டர்கள் சேற்றில் நடக்கவிடாமல் பத்திரமாகத் தூக்கிச் செல்லும் இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் உலா வந்து பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. படம்: இந்திய ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon