‘நீருக்காக மாநிலங்கள் சண்டைபோடக் கூடாது’

புதுடெல்லி: தண்ணீருக்காக மாநிலங்கள் மோதல் போக்கைக் கொள் வது சரியல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநி லங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக் கின் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. இவ்வழக்கை நேற்று முன்தினம் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது கர்நாடக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் வாதிடும் போது, “காவிரி நதி நீர் பங்கீடு இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு இருக்கவேண்டும். மைசூரு, பெங்களூரு போன்ற நக ரங்கள் விரிவடைந்ததைப் போல, தமிழகத்தில் விவசாய நிலங்களும் விரிவடைந்துள்ளன. அதற்கேற்ப, காவிரி நீரை வழங்க முடியாது. எனவே இந்தப் பிரச்சினையில் இரு மாநிலங் களிடையேயும் மோதல் ஏற்படுகிறது,” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும்போது, கர்நாடகாவும் தமிழகமும் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும். நீருக்காக மாநிலங்கள் இடையே மோதல் உருவாவதை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை,” என்றார்.