சுடச் சுடச் செய்திகள்

கிரிக்கெட் : இந்திய மகளிர் படுதோல்வி

பிரிஸ்டல்: பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பந்தடித்த இந்தியா வின் தொடக்க ஆட்டக்காரர் களாக பூனம் ரவுத், மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். மந்தனா 3 ஓட்டங்களில் நடை யைக் கட்டினார். இந்திய அணித் தலைவர் மிதாலி ராஜ், பூனம் ரவுத்துடன் இணைந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 166 ஓட்டங்களாக இருந்தபோது மிதாலி ராஜ் (69 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார். பூனம் ரவுத் சதம் அடித்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, பந்த டித்த ஆஸ்திரேலியா, 45.1 ஓவர் களில் 2 விக்கெட்டுகள் இழப் புக்கு 227 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் அணித் தலைவர் மெக் லேனிங் 76 ஓட்டங்களும் எலிஸ் பெர்ரி 60 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon