காயமடைந்த ஜோக்கோவிச் வெளியேற்றம்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் வெளியேறியுள்ளார். தாமஸ் பெர்டிச்சுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜோக் கோவிச் காயமடைந்தார். 7=6, 7=2 எனும் புள்ளிக் கணக்கில் பின்னடைவை ஜோக் கோவிச் நோக்கி-யபோது அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இருப் பினும், ஆட்டத்தைத் தொடர முடியாமல் அவர் வெளியேறினார். விம்பிள்டன் போட்டியில் ஜோக் கோவிச் கிண்ணம் ஏந்தியிருந்தால் உலகத் தரவரிசையில் அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித் திருக்கலாம். இந்த ஆட்டத்துக்கு முன்பு ஜோக்கோவிச்சுக்கு ஏற்கெனவே தோள்பட்டையில் காயம் ஏற்பட்டி ருந்தது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொள்வது பற்றி பரிசீலித்து வருவதாக அவர் கூறினார். இதற்கிடையே, நடப்பு வெற்றி யாளரான பிரிட்டனின் ஆண்டி மரே, காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டி யிலிருந்து வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் இளம் வீரரான சாம் கெர்ரியிடம் அவர் 3=6, 6=4, 6=7 (4=7), 6=1, 6=1 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் விளைவாக கிராண்ட்ஸ் லாம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை கெர்ரி பெற்றுள்ளார்.

காயமடைந்த ஜோக்கோவிச்சுக்கு மைதானத்தில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி