தைவான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மோதல்

தைப்பே: தைவான் நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமளியில் இரு பெண் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். முக்கிய உள் கட்டமைப்புத் திட்டம் பரிசீலிக்கப்பட்ட வேளையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்கள் ஒருவர் மற்றவரின் கழுத்தை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த பல உறுப்பினர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியான குவோமின்தாங், ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு ஆதரவான நகரங்களுக்குச் சாதகமாக 420  பில்லியன் தைவான் டாலர் (19 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon