சுடச் சுடச் செய்திகள்

கிளந்தான் சட்டத்தில் மாற்றம்; மது அருந்தினால் 40 பிரம்படி

பெட்டலிங் ஜெயா: மலேசியாவின் கிளந்தான் மாநில இஸ்லாமிய சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால் தண்டனை மேலும் கடுமையாகியுள்ளது. அதன்படி மதுபானங்களைக் குடித்தால் 40டி பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்படும். ஓரினப் புணர்ச்சி, கள்ள உறவு போன்ற பாலியல் குற்றங்களுக்கு 100 பிரம்படிகள் விதிக்கப்படும்.

அதே சமயத்தில் கள்ள உறவு, ஓரினப் புணர்ச்சி பற்றிய தவறான தகவல்களுக்கு 80 பிரம்படி விதிக்கவும் புதிய திருத்தவும் அனுமதிக்கிறது. இதற்கு முன்பு குடி, ஓரினப் புணர்ச்சி, சட்டவிரோத பாலியல் உறவு ஆகிய குற்றச்செயல்களுக்கு ஆறு பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்பட்டன. சட்டவிரோத பாலியல் உறவு முயற்சிக்கு மூன்று பிரம்படிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படும்.

சந்தேகப்பேர்வழிகளைக் கைவிலங்கிட சமய அதிகாரிகளுக்கும் தற்போதைய சட்டம் அதிகாரமளிக்கிறது. நீதிமன்றத்தில் காணொளி, வரைபடங்கள் போன்றவை சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். இளம் குற்றவாளிகளின் பெற்றோருக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டு 200 ரிங்கிட் முதல் 5,000 வரை இருக்கும். புதன்கிழமை அன்று கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon