வான்குடை மூலம் பறந்தவர் கீழே விழுந்து மரணம்

புக்கெட்: தாய்லாந்தின் சுற்றுத்தலமான புக்கெட்டில் படகு இழுத்துச்செல்லும் வான்குடை மூலம் பறந்த 71 வயது பிரபல வர்த்தகர் கீழே விழுந்து மாண்டார். புகழ்பெற்ற காட்டா கடற்கரையில் வான்குடை மேலே எழும்பிய சிறிது நேரத்தில் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து ரோஜர் ஹுசே கீழே விழுந்தார் என்று கூறப்பட்டது. திரு ஹுசே குழப்பத்தில் தன் உடம்புடன் கட்டப்பட்டிருந்த ஊக்குகளைத் தவறுதலாக இழுத்துவிட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறின.

வான்குடை பிரித்துவிடப் பட்டதால் அவர் தண்ணீரில் விழுந்தார். அப்போது கடற்கரையில் இருந்த பலர் அவரை மீட்டுக் கரை சேர்த்தனர். ஆனால் மூச்சு விட சிரமப்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருந்தும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அவர் வான்குடையில் பறந்ததை அவரது மனைவி படம் °படித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் விடுமுறையை முடித்துக்கொண்டு இன்று ஆஸ்திரேலியா திரும்ப முடிவு செய்திருந்தனர்.

Loading...
Load next