சுமத்ராவில் நிலநடுக்கம்; பல வீடுகள் சேதம்

ஜகார்த்தா: வடக்கு சுமத்ராவில் நேற்று உலுக்கிய 5.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பல வீடுகள் சேதம் அடைந்ததாகவும் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. நிலநடுக்கத்தின்போது பல வீடுகள் ஆட்டம் கண்டதால் குடியிருப்பாளர்கள் பலர் பதற்றம் அடைந்து வீடுகளைவீட்டு வெளியேறி தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Loading...
Load next