கோலாலம்பூரில் கனமழை; பினாங்கில் திடீர் வெள்ளப்பெருக்கு

கோலாலம்பூர்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை, வீசிய பலத்த காற்று இவற்றின் காரண மாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் வீட்டுக் கூரைகள் பறந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். வீசிய பலத்த காற்றில் வாங்சா மஜு கண்டோமினிய குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்ட டத்தின் மேற்கூரை, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்ததாக தங் களுக்கு அவசர அழைப்பு வந்தது என்று கோலாலம்பூர் தீயணைப்புப் பிரிவின் தலைவர் ஸமனி இஸ்மாயில் கூறினார்.

உடனடியாக 7 தீயணைப்பாளர் களும் தீயணைப்பு வாகனமும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக அவர் சொன்னார். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கட்டடத்தின் கூரை விழுந்த தால் 7 கார்களும் 2 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்த தாகவும் அவர் சொன்னார். இதற்கிடையே கோலாலம்பூர் அருகே கம்பங் செகம்பட் லுவார் பகுதியில் வீசிய பலத்த காற்றில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.